Thursday, March 13, 2014

Mar.14: டிஜிட்டலில் ஆயிரத்தில் ஒருவன் மறுவெளியீடு: முதல்வர் ஜெ. வாழ்த்து

Also visit at: http://www.mayyam.com









 

Tamil Nadu PR [Press Release No.452] Greeting message of the Hon'ble Chief Minister for Aayirathil Oruvan Silver Jubilee Celebration
 
 










Aayirathil Oruvan celebrates silver jubilee

CHENNAI, August 29, 2014

KARTHIK SUBRAMANIAN

MGR’s 1965 classic 'Aayirathil Oruvan' was released earlier this year in a digitally-enhanced format

MGR’s 1965 classic Aayirathil Oruvan, directed by B.R. Panthulu and released earlier this year in a digitally-enhanced format, will soon be celebrating its silver jubilee as the film closes in on the 175 day of its theatrical run in a couple of screens in the city.

The silver jubilee celebrations promise to be a bonanza for MGR fans with a gala event to be organised at Kamarajar Arangam on Monday.

Leading actors and filmmakers such as Sarath Kumar, Sathyaraj, P. Vasu and Vikraman, who have declared themselves die-hard fans of Puratchi Thalaivar are slated to attend the event.

G. Chockalingam of Divya Films, who restored the film in a digital format, thanked all the active fan associations of MGR for making the silver jubilee possible.

In keeping with an old tradition of sorts, fans of MGR have ensured that the film has matched and even surpassed the record set by Sivaji Ganesan’s Karnan, which too was digitally restored a few years ago.


Also read the related stories

40 ஆண்டுகள் கழித்து வெளியாகி, வெள்ளி விழா கண்ட எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன்! 

Posted by: Shankar 

Published: Saturday, August 30, 2014, 15:53 [IST] 


இன்றைக்கெல்லாம் எவ்வளவு பெரிய நடிகரின் படமாகவே இருந்தாலும் அது நூறு நாட்களைத் தொடுவதே பிரம்மப் பிரயத்தனம் எனும் நிலை. 

மூன்று வாரம் ஓடினாலே போதும் என்பதுதான் நிதர்சனம். 

ஆனால் காலத்தை வென்ற காவிய நாயகர்களான எம்ஜிஆரும் சிவாஜியும் மட்டும் இதில் விதிவிலக்கு.


ஆயிரத்தில் ஒருவன் இந்த ஆண்டு அதே பிஆர் பந்துலு இயக்கிய அமரர் எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் வெளியானது. 1964-ல் கர்ணனை எடுத்த பந்துலு, அதற்கு அடுத்த ஆண்டு இந்த ஆயிரத்தில் ஒருவனை இயக்கினார். எம்ஜிஆர் ஜோடியாக இப்போதைய முதல்வர் ஜெயலலிதா நடித்திருந்தார்.





மறுவெளியீடு படம் மாபெரும் வெற்றி பெற்றது. பந்துலுவின் அத்தனை கடன்களும், சிக்கல்களும் தீர்ந்தன. தற்செயலாகவோ திட்டமிட்டோ இதே போன்ற இடைவெளியில் மறுவெளியீடாக வந்தன இரு படங்களும். 2013-ல் கர்ணனும், 2014-ல் ஆயிரத்தில் ஒருவனும் மறுவெளியீடு கண்டு மகத்தான வெற்றி பெற்றுள்ளன.

புது சாதனை குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன் படம் நிகழ்த்தியிருப்பது சரித்திர சாதனை. டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவன் தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 14-ந்தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 122 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. தற்போது சென்னையில் உள்ள சத்யம், ஆல்பட் தியேட்டர்களில் 25-வது வாரமாக நோக்கி ஓடிக் கொண்டு இருக்கிறது, நல்ல வசூலுடன்.

பாராட்டு விழா இதையொட்டி ‘ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் பணியாற்றியவர்களை பாராட்டி சிறப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 175-வது நாள் வெற்றி விழாவையும் கலைஞர்களுக்கு பாராட்டு விழாவையும் நாளை மறுநாள் (1-ந்தேதி) மாலை 6.30 மணிக்கு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடத்துகின்றனர். சரத்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார்.

பி வாசு ஆயிரத்தில் ஒருவன் படத்தை வெளியிட்ட திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் வரவேற்று பேசுகிறார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்களான சத்யராஜ், பி.வாசு, ஆர்.பாண்டியராஜன், விக்ரமன், விவேக், செந்தில், கே.ராஜன், மயில்சாமி, சார்லி, ஜாக்குவார் தங்கம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

கேடயம் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பணியாற்றிய பல கலைஞர்கள் இப்போது இல்லை. இசையமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன், பின்னணி பாடலை பாடிய பி.சுசீலா, வசன கர்த்தா ஆர்.கே.சண்முகம், நாகேஷ் ஜோடியாக நடித்த மாதவி, எல்.விஜய் லட்சுமி, பத்மினி பிக்சர்ஸ் பி.ஆர்.ரவிசங்கர் போன்றோருக்கு விழாவில் கேடயம் வழங்கப்படுகிறது.

English Summary: Legendary leader MGR's classic movie Aayirathil Oruvan is completing its 25th week today in its re release of after 40 years.


Also read the related stories

திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் பேட்டி

எம்.ஜி.ஆர். நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் திரையிடப்பட்டு உள்ளது. சென்னையில் சத்யம், எஸ்கேப், பி.வி.ஆர்., தேவி பாரடைஸ், அபிராமி தியேட்டர்களில் திரையிடப்பட்டு 2–வது வாரம் ஓடுகிறது. நேற்று தேவி பாரடைஸ் தியேட்டரில் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டனர்.

எம்.ஜி.ஆர். கட்– அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து படம் பார்த்தனர். டைரக்டர் அமீர், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் உள்ளிட்ட பலர் படம் பார்த்தனர். நேற்று ஒரேநாளில் பகல் காட்சியில் மட்டும் இந்த தியேட்டரில் ரூ.60 ஆயிரத்து 379 வசூலானது. ஒருவாரத்துக்கு முன்பு இதே தியேட்டரில் காலை, பகல் காட்சி இரண்டிலும் ரூ.47 ஆயிரத்து 494 மட்டுமே வசூலானது. இரண்டாவது வாரத்தில் வசூல் கூடி இருப்பதாக தியேட்டர் மானேஜர் தெரிவித்தார்.

படம் பார்த்த ரசிகர்கள் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை கப்பலில் பயணம் செய்து வந்த அனுபவத்தை பெற்றோம் என்றனர். ரசிகர்கள் ஆரவாரமாக படம் பார்த்தனர் என்றும் ஒரு வருடம் இரவு பகல் பணிபுரிந்து கஷ்டப்பட்டு இப்படத்தை டிஜிட்டலில் புதுப்பித்ததற்கான பலனை பெற்று விட்டேன் என்றும், இந்த படத்தை வெளியிட்ட திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் தெரிவித்தார். தேர்தல் முடிந்த பிறகும்., இந்த படம் தமிழகம் முழுவதும் திரையிடப்படும் என்றும் அவர் கூறினார்.


Also read the related stories


Pic Sources: 
Maalaimalar ePaper

எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் நூறாவது நாள் விழா!

Posted by: Shankar

Published: Thursday, June 19, 2014, 16:25 [IST]

பெரிய ஹீரோக்களின் படமாகவே இருந்தாலும், இன்றைக்கு நூறு நாட்களைத் தொடும்போது தியேட்டர்களில் ரசிகர்கள் தலைகளை எண்ணிவிடும் அளவுக்குத்தான் கூட்டம் வருகிறது.

ஆனால் புரட்சித் தலைவர் என்று கொண்டாடப்படும் அமரர் எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் படம் 49 ஆண்டுகளுக்குப் பிறகு மறு வெளியீடு செய்யப்பட்டு, நூறு நாட்களைத் தொடவிருக்கிறது, அதுவும் ஹவுஸ்புல் காட்சிகளுடன்!


டிஜிட்டலில் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்ட இந்தப் படம் கடந்த மார்ச் 14-ந்தேதி 122 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் இப்படத்தை வெளியிட்டார்.


மதுரையில் மதுரையில் மட்டும் சரியாகப் போகவில்லை என்றார்கள். தேர்தல் முடிந்து அங்கு மறுவெளியீடு செய்ததில் படம் நன்றாக ஓடியது. மற்ற ஊர்களில் ஷிப்டிங் முறையில் தொடர்ந்து இந்தப் படம் ஓடிக் கொண்டுள்ளது.


மல்டிப்ளெக்ஸ்களில் குறிப்பாக மல்டிப்ளெக்ஸ்களில் நல்ல கூட்டம் இந்தப் படத்துக்கு. வேளச்சேரியில் லக்ஸ் அரங்கம் புதிதாக திறக்கப்பட்ட போது திரையிடப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன். அத்தனைக் காட்சிகளும் ஹவுஸ்புல். படத்தை அந்த அரங்கில் ஒரு மாதம் வரை திரையிட்டனர். கடைசி நாள் காட்சிக்கும் கணிசமான கூட்டம்.


100வது நாள் இன்றும் குறையாத வசூலுடன் சென்னை சத்யம், ஆல்பட் தியேட்டர்களில் 100 வது நாளை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறது ஆயிரத்தில் ஒருவன்.


ஆல்பட் திரையரங்கில் இந்த விழா வரும் 22 ந்தேதி ஆல்பர்ட் தியேட்டரில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ரசிகர்கள் அன்று காலை 11 மணிக்கு கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் சிறப்பு பூஜை செய்கின்றனர். 1000 பேருக்கு அன்னதானம் வழங்குகிறார்கள்.


ஊர்வலம் மாலை 3 மணிக்கு சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஆல்பட் தியேட்டர் சென்றடைகிறார்கள்.


சிறப்புக் காட்சி ஆல்பட்டில் மாலை  6.30 மணிக்கு ஆயிரத்தில் ஒருவன் படத்தின் சிறப்பு காட்சி நடக்கிறது. இதில் நடிகர்கள், சரத்குமார், விவேக், மயில்சாமி, இயக்குநர் பி.வாசு, இசையமைப் பாளர் எம்.எஸ். விஸ்வநாதன், பின்னணி பாடகி பி.சுசீலா, திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தினர் பங்கேற்கின்றனர்.

English Summary: Late legendary leader MGR's Aayirathil Oruvan movie is celebrating its 100th day run in Albert theater Chennai on Sunday, June 22nd.

Sources: http://goo.gl/OrDQUq

Also read the related Stories





Aayirathil Oruvan Audio Release Function in Jaya TV




Jaya TV News about the release of Aayirathil Oruvan





Aayirathil Oruvan Celebration by Fans




Also read the related stories


Courtesy_

Also read the related stories

For Pondicherry City this Hit Movie released in Jeeva Rukmani Screen 2 - A/C DTS for 4 Shows per day vide 11:30 AM, 3:00 PM, 6:45 PM and 10:00 PM.

For Online Ticket Booking, visit at: http://www.ticketgreen.com

Also read the related stories

ரூ 1 கோடி வசூலுடன் 75வது நாளைத் தொட்டது எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன்!

Posted by: Shankar

Published: Wednesday, May 28, 2014, 16:37 [IST]

எம்ஜிஆர் படத்தின் வெற்றிச் செய்திகளை நாமும் எழுதுவோமா என்ற பல நிருபர்களின் கனவை நனவாக்கியிருக்கிறது ஆயிரத்தில் ஒருவன். 

ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் இது. புரட்சித் தலைவர் எம்ஜிஆருடன், இன்றைய முதல்வர் ஜெயலலிதா ஜோடியாக நடித்திருந்தார். 

அன்றைக்கு தமிழ் சினிமா வசூலில் சரித்திரம் படைத்த இந்தப் படத்தை, 50 ஆண்டுகள் கழித்து டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் வெளியிட்டனர். கிட்டத்தட்ட 100 அரங்குகளில் வெளியான இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு.

திரையுலகப் பிரபலங்களும் திரண்டு போய் இந்தப் படத்தைப் பார்த்தனர். மதுரையில் மட்டும் படம் சுமாராகத்தான் போனது. ஆனால் அங்கும் மறுவெளியீடு செய்து வசூலை ஈட்டினர். 

இப்போது இப்படம் சென்னை சத்யம், ஆல்பர்ட் தியேட்டர்களில் 75 நாட்களை தாண்டி ஓடுகிறது. பிற மாவட்டங்களிலும் 100 - வது நாளை நோக்கி ஓடிக்கொண்டுள்ளது இப்படம். 

இதுவரை ரூ.1 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆயிரத்தில் ஒருவன் 75 நாள் விழா சத்யம் தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடினர். டைரக்டர் பி.ஆர்.பந்தலு மகன் பி.ஆர்.ரவிசங்கர், எம்.ஜி.ஆரின் மெய் காப்பாளர் கே.பி.ராம கிருஷ்ணன், திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் ஆகியோர் விழாவில் சத்யம் தியேட்டரில் தொடர்ந்து ஹவுஸ் புல் காட்சிகளாக ஆயிரத்தில் ஒருவன் படம் ஓடிக் கொண்டுள்ளது.

English Summary: MGR's action classic Aayirathil Oruvan crossing 75 days with more than Rs 1 cr collection.

Courtesy_

Also read the related stories

Jayalalithaa wishes success for the re-release of Aayirathil Oruvan

Date posted: March 14, 2014

Chief-minister J. Jayalalithaa has wished the success for the re-release of MGR’s Aayirathil Oruvan. The record-breaking film, which released 49 years ago in 1965 and which was the first film of Jayalalithaa opposite MGR, is being re-released in more than 100 halls in Tamil Nadu and Kerala by Divya Films after undergoing modifications in its audio/video quality in a digitized mode.

“The great tenius MGR, who proved that noble thoughts and morality can be taught to people through films, has been my political guru. Critics have always said that MGR’s films were not only commercial entertainers but also films which have stood the test of times. Aayirathil Oruvan, incidentally, was a milestone film in the career of MGR as the film dealt with a script wherein MGR freed slaves and turned them into revolutionaries.

“I was fortunate enough to have been paired up opposite MGR in this film. The film’s re-release would help today’s youth feel the revolution and social reforms spoken about by MGR in it. It is an appreciable effort by Chokkalingam to have turned the film into digitized mode which only goes to show that the charisma of MGR would always be there and would never become a thing of the past.

“I’m happy that the film is being re-released today in many halls in Tamil Nadu and Kerala. I convey my heart-felt appreciation to those behind this effort. I hope the film would repeat its success this time too,” the message concluded.

Courtesy_

Also read the related stories

‘ஆயிரத்தில் ஒருவன்’ இன்று மீண்டும் ரிலீஸ்

Published: March 14, 2014 12:58 IST 


எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடிப்பில் 1965 ம் ஆண்டு வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் நவீன தொழில்நுட்ப வசதிகளால் மெருகூட்டப்பட்டு இன்று தமிழகமெங்கும் 110க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

படத்தை வெளியிடும் திவ்யா பிலிம்ஸ் உரிமையாளர் சொக்கலிங்கம் இதுபற்றி கூறியதாவது:

மிகவும் சேதமடைந்த ‘பிக்சர் நெகட்டிவ்’ மற்றும் ‘சவுன்ட் நெகட்டிவ்’களை எடுத்து கடந்த இரண்டு வருட காலமாக அதனை சீர் செய்யும் முயற்சியில் இறங்கினோம். ‘ரெஸ்டோரஷன்’ ‘டிஐ, கலர் கரெக் ஷன், ஆகிய வேலைகளை செய்து முடிந்த வரை இன்றைய கால தரத்திற்கு ஏற்ற வகையில் சினிமாஸ்கோப்பில் வடிவமைத்துள்ளோம்.

அடுத்தபடியாக ‘சவுன்ட் நெகட்டிவ்’வை சரி செய்யும் முயற்சியில் இன்றைய கால கட்ட இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் ‘மோனோ சவுன்ட் சிஸ்டம்’ ஆக இருந்த ‘சவுன்ட் நெகட்டிவ்’ வை ‘டிடிஎஸ்’ - 5.1 தொழில்நுட்பத்திற்கு நவீனப்படுத்தியுள்ளோம்.

இந்தப்படத்திற்கு பின்னால் இருந்த ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களையும் கவுரவிக்கும் வகையில் ‘டைட்டில் கார்டு’ வரும் போது அவர்களின் பெயரோடு புகைப்படமும் இடம்பெற செய்யப்பட்டுள்ளது. 

ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப்படம் தமிழகம் மட்டுமில்லாமல் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட இடங்களிலும் ரிலீஸ் ஆகிறது. குறிப்பாக சென்னையில் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் முதல் 5 நாட்களுக்கு அனைத்து டிக்கெட்களும் விற்பனையாகி உள்ளது

இவ்வாறு அவர் கூறினார்.

Courtesy_

Also read the related stories

ஆயிரத்தில் ஒருவன் மறுவெளியீடு: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

By Sasikumar Balakrishnan

First Published : 13 March 2014 12:26 PM IST


எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் படம் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு வெளியீடு செய்யப்படும் முயற்சிக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1965ல் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்து பெரிய வெற்றிபெற்ற ஒரு திரைப்படம் தான் 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம். இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். ஜோடியாக ஜெயலலிதா நடித்திருந்தார். 

இவர்களுடன், எம்.என். நம்பியார், நாகேஷ், ஆர். எஸ். மனோகர் மற்றும் மாதவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த இந்தப் படத்தை பி.ஆர்.பந்துலு இயக்கியிருந்தார்.

சுமார் 49 ஆண்டுகளுக்குப் பிறகு 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது. 

அதுவும் டிஜிட்டல் முறையில் மெருகேற்றப்பட்டு தமிழ்நாடு முழுவதும் 100 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. வரும் வெள்ளிக்கிழமை (மார்ச்-14) இந்தப்படத்தை திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் வெளியிடுகிறது.இந்நிலையில் திவ்யா பிலிம்ஸின் இந்த முயற்சியை பாராட்டி முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

அதில், திரைப்படங்கள் வழியாக மக்கள் மனதில் உயரிய சிந்தனைகளையும், வாழ்வில் நெறிகளையும் புகுத்த முடியும் என்பதை உலகிற்கே எடுத்துக் காட்டிய மாபெரும் கலையுலக மேதை, எனது அரசியல் ஆசான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள். 

எனவே தான், பல கலை விமர்சகர்களும், திரைப்பட ஆர்வலர்களும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திரைப்படங்கள் 'வெறும்'பொழுதுபோக்கு படங்கள் மட்டுமல்ல, தலைமுறைகளைக் கடந்து நிற்கும் வாழ்க்கைப் படங்கள் என்று போற்றுகின்றனர். புரட்சித் தலைவரின் திரையுலக வரலாற்றில் மிகப் பெரிய சாதனைக் கல்லாக அமைந்த திரைப்படம் 'ஆயிரத்தில் ஒருவன்'. 

அடிமைப்பட்டுக் கிடந்த மக்கள் தங்களை விடுதலை விரார்களாக மாற்றிக் கொல்கின்ற சம்பவன் க்கள் உலகின் பல இடங்களில் நிகழ்ந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒரு திரைப்படத்தின் வழியாகத் திரட்டி மக்கள் மனதில் சுதந்திர வேட்கையையும், தனி மனித நேமையையும் நிலைநாட்ட 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்.

அந்த மாபெரும் வெற்றிப் படத்தில் நான் முதன் முதலாக புரட்சித் தலைவரோடு இணைந்து நடிக்கின்ற நல்வாய்ப்பினைப் பெற்றேன். 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன் வெளியிடப்பட்ட பொது தமிழகத்தில் மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. 

இன்றைய தலைமுறையினர் அந்த எழுச்சியைப் பெறவும், நாளைய தலைமுறையும் அதனால் பயன் பெறவும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் மீண்டும் புது வடிவம் பெற்று வெளியாக இருக்கிறது என்பது எனக்கு மட்டுமல்ல, இன்றளவிலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மீது பற்று கொண்டவர்கள் மட்டுமல்ல, இந்தியத் திரையுலகிற்கும், திரை ரசிகர்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்ற ஒரு செய்தியாகும். 

'ஆயிரத்தில் ஒருவன்' வெற்றித் திரைப்படத்தைப் புதுப்பித்து 14.03.201 முதல் தமிழ் நாட்டில் உள்ள திரையரங்குகளில் மறு வெளியீடு செய்ய தாங்கள் ஏற்பாடு செய்திருப்பதை அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. 

தங்களின் இந்த முயற்சிக்கு எனது இதயமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், தங்களின் இந்தப் பயணம் தொடர எனது நல்வாழ்த்துகள்." இவ்வாறு அந்த வாழ்த்துச் செய்தியில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் இந்த வாழ்த்து குறித்து திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் தெரிவித்திருப்பதாவது:

தமிழக முதல்வர் ஜெயலலிதா, என்னுடைய இந்த முயற்சியினைப் பாராட்டி மிகவும் ஊக்குவித்து, வாழ்த்துச் செய்தியினை எமக்கு அளித்துள்ளார்கள். இதை எனது வாழ்நாள் சாதனையாக, நான் பிறந்த பேறினை அடைந்ததாகக் கருதுகிறேன். 

இதன் வாயிலாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, என்னுடைய பணிவான நன்றியினையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

Courtesy_

Also read the related stories

டிஜிட்டலில் ‘ஆயிரத்தில் ஒருவன்’

Published: December 8, 2013 00:00 IST 


எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் 49 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியாகவிருக்கிறது. ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் திரைக்கு கொண்டுவரத் திட்டமிடப்பட்டிருக்கும் இந்தப்படத்தின் டிரெயிலர் வரும் பொங்கல் பண்டிகை முதல் திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

இது குறித்து திவ்யா பிலிம்ஸ் உரிமையாளர் சொக்கலிங்கம் கூறியதாவது:

எம்.ஜி.ஆர் நடிப்பில் பெரும் வெற்றியை பெற்ற ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியிடவிருக்கிறோம்.

35 எம்.எம் வடிவத்தில் இருந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை புதிய சினிமாஸ்கோப் வடிவத்தில் மாற்றும் வேலைகளில் தீவிரமாக இயங்கி வருகிறோம்.

அதேபோல 5.1 டிடிஎஸ் சப்தத்தில் மெருகேற்றப்பட்டு பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்த முதல் படம் இது. அன்று நாயகியாக நடித்த ஜெயலலிதா இன்று முதல்வராக இருக்கும் இந்நேரத்தில் படத்தின் டிஜிட்டல் வடிவத்தை கொண்டுவருவது சந்தோஷம் அளிக்கிறது.

இதேபோல, முன்பு சிவாஜி நடிப்பில் வெளிவந்த ’கர்ணன்’ படத்தை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியிட்டோம்.

வரும் டிசம்பர் 24-ம் தேதி எம்ஜிஆரின் நினைவு தினத்தன்று இந்த டிஜிட்டல் வடிவத்தின் தொடக்க வேலைகளின் அறிவிப்பை அவரின் நினைவு தின சமர்ப்பணமாக அறிவிக்க திட்டமிட்டிருக்கிறோம். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் ஒரே நேரத்தில் படம் வெளிவர உள்ளது.

Courtesy_

Also read the related stories

மக்கள் திலகத்தின் ஹீரோயிசம்! புதுப்பொலிவுடன்


சிங்கமாய் கர்ஜிக்கும் மக்கள் திலகம்! புதுப்பொலிவுடன்!! 


நிகழ்கால சினிமாவுக்கு சவால்விடும் அளவிற்கு புதுப்பொலிவுடன் டிஜிட்டலில் வரும் வெள்ளி அன்று (14.03.2014) வெளியாக உள்ளது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன். எம்.ஜி.ஆரின் கத்திச்சண்டை ஹீரோயிசம் அவருக்கு மட்டுமே பொருந்தி இருப்பதை இன்றைய இளைஞர்களும் உணர ஒரு வாய்ப்பாக இப்படம் உள்ளது. 


1965யில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் தற்போது இருக்கும் சினிமா ரசிகர்களையும் கவர்கிறது என்றால் சினிமாவில் பணிபுரிந்த முன்னோர்களின் உழைப்பே நம் கண்முன் தெரிகிறது. எம்.ஜி.ஆரின் வால் சண்டை, நம்பியாரின் வில்லத்தனம், நாகேஷின் நகைச்சுவை, முதல் முறையாக எம்.ஜி.ஆரோடு ஜோடி சேரும் ஜெயலலிதா என அத்தனைபேரும் நேரம் போவது தெரியாமல் படத்தை ரசிக்க வைக்கிறார்கள். 

பாட்டு வந்தாலே வெளியே போகத்தூண்டும் இந்த கால படங்களுக்கு மத்தியில், அவ்வப்போது பாடல்கள் வந்தாலும் அத்தனைப் பாடல்களும் ரசிக்க வைக்கிறது. காரணம், எல்லாப் பாடல்களும் கதையோடு கலந்து இருப்பதே! ஏன்? ஏன்? ஏன்? என அடிமைகளாய் வேலைசெய்பவர்கள் கேள்வி கேட்க, ‘ஏன் என்ற கேள்வி... இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை... நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை’ என்று பாய்ந்து வந்து பாடுகிறாரே... ஹீரோன்னா இவருதம்பா என்று  இதயம் சொல்கிறது. 

‘அதோ அந்த பறவைபோல...’ ‘ஆடாமல் ஆடுகிறேன்...’ ‘உன்னை நான் சந்தித்தேன்...’ ‘ஓடும் மேகங்களே...’ ‘பருவம் எனது பாடல்...’ ‘நாணமோ இன்னும் நாணமோ...’ என்று ‘மெல்லிசை மன்னர்கள்’ விஸ்வநாதன் ராமமூத்தியின் மயக்கும் இசையில், டி.எம்.எஸ் மற்றும் பி.சுசீலாவின் அசரவைக்கும் குரலில், கண்ணதாசன், வாலி வரிகளில் அனைத்து பாடல்களும் மணி மணியாக ஒலிக்கிறது. பார்ப்பதற்கும் அத்தனை அழகு, திரையில் இருப்பது மக்கள் திலகம் அல்லவா!

‘நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்’ என்று மக்கள் திலகம் பாடும்போது கைத்தட்டல் அரங்கத்தை அதிரவைக்கிறது. ‘நாட்டில் உள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்’ என்று ஜெயலலிதவிடம் அவர் பாடும்போதும் சிலர் கைத்தட்டும் ஓசை கேட்கிறது! 

ஜெயலலிதவின் அறிமுகப் பாடல் முடிந்ததும் அவர் தந்தை வந்து ‘நீ அயிரம் அடிமைகளுக்கு சொந்தக்காரியாகி ஆனந்தம் அடையவேண்டும்’ என்று ஆசீர்வதிக்கும் காட்சி இந்த கால இளைஞர்களுக்கு ஆச்சரியத்தையேக் கொடுக்கிறது. 

‘மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?’ என்று நம்பியார் கேட்டதும் ‘சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்’ என்று சிங்கமாய் கர்ஜிக்கும் மக்கள் திலகத்தின் கம்பீரம், அவருக்கு நிகர் அவரே என்பதை உறுதிப்படுத்தும் காட்சி. ‘உன் அதிகாரம் என்ன சிலப்பதிகாரமா என்றென்றும் நிலைத்து நிற்க’ என்று அதிகாரம் படைத்தவர்களைப் பார்த்து எம்.ஜி.ஆர் கேட்பதும்,  ‘தோல்வியையே அறியதவன் நான்’ என்று நம்பியார் சொன்னதும் ‘தோல்வியை எதிரிகளுக்கு பரிசளித்தே பழகியவன் நான்’ என்று எம்.ஜி.ஆர் பேசும் வசனங்கள் அனல் பறக்கிறது. 

கடல் சார்ந்த பயணம் அதில் நடக்கும் போராட்டங்கள் என்பதால் காடு, தீவு, கடல், கடற்கரை, கப்பல் என காட்சிக்குக் காட்சி பிரம்மாண்டம்! கடலில் தத்தலிக்கும் கப்பலில் சண்டைக் காட்சிகளையும் பாடல் காட்சிகளையும் பிரம்மாண்டமாக படமாக்கிய இயக்குனர் பி.ஆர்.பந்தலுவின் திறமை பிரம்மிக்க வைக்கிறது. 

டிஜிட்டல் வடிவத்தில் வெளியாகி இருக்கும் ஆயிரத்தில் ஒருவன் படத்தை அந்த கால ரசிகர்கள் மட்டுமல்ல இந்த கால இளைஞர்களும் பார்த்து ரசிக்கலாம்!

Courtesy_

Also view the related Wiki links

1. In English: http://en.wikipedia.org

2. In Tamil: http://ta.wikipedia.org 

Also read the related stories


Aayirathil Oruvan restored version preview


By Jill More on March 12, 2014


Aayirathil OruvanThe digital version of 1964 super hit film Karnan roared at the box office. Few more classics were released with enhanced version but could not match up with the success of Sivaji Ganesan starrer Karnan. Now its the turn of MGR’s blockbuster hit Aayirathil Oruvan (1965) which is all set for digitally restored release on March 14th, 2014. 


Other notable casts in the film


Jayalalitha, Nambiar, Nagesh and RS Manohar. Evergreen songs were composed by Vishwanathan Ramamoorthy. The film was directed by legendary BR Banthulu.


Divya films which re-released Karnan in the year 2012 and Prasad EFX Studio have worked together for Aayirathil Oruvan‘s digital make over. Prasad EFX technical team has completed the work recently. They have also converted the 35mm film to digital scope. 


Jaya TV recently organized the audio launch of the film which was graced by many veterans from the industry. Excerpts from the function:


Shanthi Chokalingam (Divya Films)


After Karnan we once again approached Prasad EFX team with Aayirathil Oruvan. Initially they felt that it will be very tough to restore because almost all the reels were damaged. But we requested them to try their best. 


They took up the challenge and executed the work after two years of hard work. We are proud to say that for the first time in film history, audio launch funtion is conducted for a re-release.


Abirami Ramanathan


I was studying 10th standard when this film was released. The performances of MGR and Jayalalitha is the best we have ever seen. In those time fans of Sivaji and MGR were ‘fanatics’. Some of them even donate the blood and buy fil tickets to watch their hero on screen.


Actor Vivek


Aayirathil Oruvan has the star cast of India’s best hero (MGR) and beautiful heroine (Jayalalitha).


Major multiplexes in the city are getting ready to release the classic this friday. The film is promoted as ‘Titanic of 1965′. As there is no other big releases this week Aayirathil Oruvan is expected to attract large number of audience.


Courtesy_

http://jillmore.com

Also read the related stories


Aayirathil Oruvan – Chennai theatre details


By Jill More on March 13, 2014


Chennai theatre list and timing of Aayirathil Oruvan (restored version) Cinemascope:


Sathyam Cinemas – Santham 12:00 and 6:30 PM. Escape 3:00 and 9:30 PM.  S2 Theagaraya 12:10 and 6:40 PM.


S2 Perambur 12:50, 3:35, 6:55 and 10:00 PM.


INOX  Mylapore: 3:40 PM. Devi Paradise 12:00 and 7:00 PM. Sangam Cinemas – Padmam 6:30 PM.


Abirami Mega Mall – Swarna Sakthi Abirami 3:00, 6:30 and 10:00 PM.  Albert  6:30 and 10:00 PM.


AVM Rajeshwari  11:45 AM, 3:00, 6:30 and 10:00 PM. Ambattur Rakki  11.30 AM, 6:30 and 10:00 PM.


PVR and few more theatres will also release the film on friday.


Morning shows are expected to be added during the weekend.


Courtesy_

jillmore.com

Also read the related stories


MGR to shine better in Jan’2014


By Jill More on December 24, 2013


If It was the digital remake of Sivaji Ganesan starrer Karnan that stormed the box office last year, then january 2014 will see the digital version of yester year super hit film Aayirathil Oruvan.  The classic was first released in the year of 1965. 


It was directed and produced by legendary film maker BR Bandulu. The lead roles were played by non other than MG Ramachandran and Jayalalitha. MN Nambiar was the villain and Nagesh took care of comedy portions.


Ayirathil Oruvan‘s success helped BR Bandulu to clear off his earlier debts because of the loss incurred by Kappalottiya Tamizhan and Karnan(which did a good business on its re-release after some time). The money spinner is digitally enhanced by Divya Films and is all set for a january 2014 release.


MS Viswanathan has also worked on this version by providing music in a digital surround sound format. Digital restoration work is handled Prasad EFX, the team that put their best effort in restoring Karnan and Pasamalar digitally. 


Lot of tamil classics are undergoing digital restoration but the collections are not guaranted. Ninathale Inikkum was an example. Because of the poor digital enhancement audience did not turn up as expected. We have to wait and see whether MGR’s classic could re create the magic once again in January.


Courtesy_

http://jillmore.com

Also read the related stories


1965 Jayalalithaa film back in theatres, beats EC code


Binoy Valsan, TNN | Mar 13, 2014, 03.08 AM IST



Posters of Jayalalithaa-MGR blockbuster ‘Aayirathil Oruvan’are swamping Chennai as the film is set for a re-release. 

COIMBATORE: Being a movie star has its advantages, especially when it comes to bypassing the strict norms of the model code of conduct to campaign for your party. 

Election officials have stripped the walls bare of posters of political leaders but banners of Jayalalithaa and MGR are splashed across Coimbatore. The posters have younger versions of the stars and advertise the release of the digitally re-mastered version of the Kollywood classic 'Aayirathil Oruvan' (One Man In A Thousand). 


However, Tamil Nadu chief electoral officer Praveen Kumar is not convinced. He said the film posters in public places featuring political figures are a violation of the model code and will be removed. "We can't stop the screening of the movie but we won't allow the posters on streets. They can put up the banners inside the theatre complex," he said. 


The 1965-film stars M G Ramachandran, who went later founded AIADMK and became Tamil Nadu chief minister, as a swashbuckling pirate who is captured and sold as slave, with Jayalalithaa as his damsel in distress. 


The movie, initially produced by Padmini Pictures, has been restored and digitized and will be released across in Tamil Nadu, Kerala and Karnataka on March 14. Chennai-based Dhivya Films, which recently updated and released Sivaji Ganesan's Karnan, is behind the re-mastered version. 


"The original movie was in 35mm format but the new version is in cinemascope. Jayalalithaa is yet to watch the new version but she sent me a congratulatory note for our good work," said G Chockalingam of Dhivya Films, adding there was no political motive behind the release. 


K Raja Mannar, distributor of the film for Coimbatore, Nilgiris, Erode and Tirupur circle, said, "We are hoping the movie will do good business." Coimbatore district collector Archana Patnaik said the posters would be removed from public spaces immediately. 


S Venkataraman, proprietor of movie distribution company Vijayalakshmi Films, which released 80 MGR movies in its heydays, said the screening of MGR films in the run up to elections would definitely impact on voters. "The dialogues, theme and songs of MGR movies still connect with viewers. One movie show will have the impact of 10 public meetings," said Venkataraman.


Courtesy_

http://timesofindia.indiatimes.com

Also read the related stories


To beat poll code, first Jaya movie with MGR returns, angers DMK


Gopu Mohan , Chennai | Sat Mar 15 2014, 04:02 hrs


At the Devi Theatre in Chennai on Friday. (IE Photo: N Krishnamoorthi)

There was a small puja, complete with flowers and sweets. There were slogans and processions, and interviews to the media. The crowd was mostly men, with a few women and a family or two.

There have been many hit films before, and bigger ones since. But for the eager fans of matinee idol and late chief minister M G Ramachandran, who gathered Friday before Devi Theatre in Chennai, the film Ayirathil Oruvan is just what the name says: one in a thousand.


Directed by producer-director B R Panthulu, the film was originally released 49 years ago, way back in 1965, after MGR was established as the biggest box-office draw in Tamil Nadu but before he became an active politician. And this was the first film in which he was paired with the popular young actress who went on to rule the screen and state, AIADMK general secretary and present Chief Minister J Jayalalithaa.


“I first watched the film about 30 years ago. By then, it was a cult film in Tamil Nadu, what with the indirect message it contained, the dialogues that highlighted injustice in society and the plot that portrays the hero as a true leader of the oppressed,” said L Muthuswamy, a clerk at a private company, who had taken a day’s leave to watch the film once again. Born in the year the film was released, he said he had lost count the number of times he had watched the film.


The re-release of a film is not something new in Tamil Nadu where small theatres regularly run old hits that offer value for money, without the risk and money involved in securing new releases. In fact, a theatre in Chennai had run Ayirathil Oruvan just a few weeks ago. What is new about this release is that it has been digitally restored, the quality of the visuals enhanced and the audio raised to 5.1 channel from mono.


“My first attempt to digitise classic films began with Karnan, a mythological film which had Sivaji Ganesan in the title role. When we released it in 2012, it did very well, running for more than 25 days in 30 of the 72 theatres where it was released. One high class theatre ran it for 157 days. That is when I zeroed-in on Ayirathil Oruvan,” said G Chockalingam of Dhivya Films, the company behind the digitised version.


Rival politicians are not amused to find a hit from the past that has the AIADMK founder and present leader as lead characters at a time when the state is headed to Lok Sabha polls. Though he died over two decades ago, MGR still has committed fans — and dedicated voters — which Jaya inherited.


All the viewers who had gathered outside the theatre Friday belonged to this group. They offered floral tributes to the film posters stuck outside, and distributed sweets. Jaya TV, run by people close to the AIADMK, was on the spot early, capturing the mood.


“The enthusiasm among the people shows that puratchi thalaivar (revolutionary leader), our idaya deivam (the lord of our hearts) continues to be the biggest draw for the people of Tamil Nadu,” said S Rajkumar, a leader of God MGR Devotees Association, to the party channel, flashing the victory sign which in Tamil Nadu also denotes the two leaves of the AIADMK.


DMK spokesperson T K S Elangovan, a Lok Sabha candidate himself, said his party would complain to the Election Commission, arguing that films, too, were propaganda vehicles, especially in Tamil Nadu during election time. But officials said it would not be easy to apply the poll code to a film release. Officials have asked distributors to restrict the posters and hoardings to the theatre premises.


Courtesy_

http://m.indianexpress.com

Also view the additional inputs:


http://mgrroop.blogspot.in


http://www.kollywoodtoday.net


http://www.kollywoodtoday.net


http://www.kollywoodtoday.net



http://www.kollywoodtoday.net


No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

DISCLAIMER

This Blog Spot is meant for publishing Entertainment Postings as we collected from the renowned Dailies, Magazines, etc., so as to keep it as a ready reckoner by the Viewers. As such the readers may extend their gratitude towards the Author as we quoted at the bottom of each Post under the title "Courtesy".

Labels

MGR (21) Article (7) Tamil Nadu (7) 2013 (5) Wikipedia (5) Actor (4) Director (4) Enga Veetu Pillai (4) Interview (4) Sivaji Ganesan (4) THE HINDU (4) Tamil Cinema (4) Youtube (4) Chief Minister of Tamil Nadu (3) Jayalalithaa (3) Pondicherry (3) 100th Birthday (2) Actress (2) Comedian (2) Death (2) Dinamalar (2) Manirathnam (2) Ulagam Sutrum Vaaliban (2) தி இந்து (2) 100 Years of Indian Cinema (1) 175th Day (1) 1965 (1) 1977 (1) 2012 (1) 2014 (1) 3 Legends (1) A.V.Meiyappan Chettiar (1) AIADMK (1) AVM (1) Aayirathil Oruvan (1) Arnold Schwarzenegger (1) B.R.Panthulu (1) Bangra Dance (1) Bommai Magazine (1) California (1) Centenary (1) Centenary Celebrations (1) Coimbatore (1) Death Anniversary (1) Dinamani (1) Director Bhagyaraj (1) Enthiren (1) Facebook (1) Frontline (1) Gemini Ganesan (1) Governor (1) Hari (1) Hindi (1) Hollywood Star (1) Jaya TV (1) K.S.Ravikumar (1) Kaka Radhakrishnan (1) Kamalhassan (1) Kerala (1) Kovaithambi (1) Kudiyiruntha Koil (1) Latha (1) M.S.Viswanathan (1) MSV (1) Mannathi Mannan MGR (1) Melodies Songs (1) Movies Lists (1) Muruga movie (1) Music Legend (1) NSK alias N.S.Krishnan (1) Nadodi Mannan (1) Nakkheeran (1) Nayagan (1) Old Songs (1) P.B.Sreenivas (1) PBS (1) Palakkad (1) Playback Singer (1) Poet Vaali (1) Policegiri (1) Rajasulochana (1) Rajni (1) Ramarajan (1) Rickshawkaran (1) Royal Theatre (1) Saamy Movie (1) Saroja Devi (1) Shankar (1) Story (1) Subramaniapuram (1) T.S.Balaiah (1) TAMIL HINDU (1) Tamil Actor (1) Thenkinnam (1) Times of India (1) USA (1) Ulavudurai DIG (1) Vadivelu comedy (1) Veera Pandiya Kattabomman (1) Videos (1) Vijay TV (1) Vijayalakshmi (1) ஆயிரத்தில் ஒருவன் (1) இதயக்கோவில் (1) காகா ராதாகிருஷ்ணன் (1) குடியிருந்த கோயில் (1) தாய் சொல்லைத் தட்டாதே (1) தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் (1) நக்கீரன் (1) பாலையா (1) மணிரத்னம் (1) ராஜசுலோசனா (1)